இலங்கைக்கு 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் குழு நேற்றிரவு(23) நாட்டை வந்தடைந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக ஹஷ்மதுல்லா ஷஹீத் செயற...
இலங்கைக்கு 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் குழு நேற்றிரவு(23) நாட்டை வந்தடைந்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக ஹஷ்மதுல்லா ஷஹீத் செயற்படுகிறார்.
சிரேஷ்ட வீரரான மொஹமட் நபி, இளம் சகலதுறை வீரரான அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் 2ஆவது போட்டி 4 ஆம் திகதியும் 3ஆவது போட்டி 7 ஆம் திகதியும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளன.
உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றில் விளையாடவுள்ள இலங்கை அணிக்கு இந்தத் தொடர் முன்னோடி பயிற்சியாக அமைந்துள்ளது.