16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மகுடத்துக்கான இறுதி போட்டி சென்னை சுப்பர் கிங்சும், குஜராத் டைட்டன்சும் ஆமதாபாத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு ...
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மகுடத்துக்கான இறுதி போட்டி சென்னை சுப்பர் கிங்சும், குஜராத் டைட்டன்சும் ஆமதாபாத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு மோதுவதாக இருந்தது.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் போட்டியை கண்டுகளிப்பார்கள் என்று கணிக்கப்பட்டு இருந்தது.
தொடர்ந்து மழை நீடித்ததால் இன்று (29) இரவு 7.30 மணி இறுதிப்போட்டி நடைபெறும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் தரப்பில் நேற்றிரவு 11 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
ரசிகர்கள் டிக்கெட்டுகளை பத்திரமாக வைத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.