அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலைகளை இரண்டு மடங்குகளால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜூ...
அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலைகளை இரண்டு மடங்குகளால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாயாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கிரிஷாந்த மரம்பகே தெரிவித்தார்.
அதன்படி, இருபது ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலை இரட்டிப்பாகும். அதனை, தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த விலை அதிகரிப்புக்கு நிதி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, லொத்தர் சீட்டுகளின் விலை அதிகரிக்கப்பட்டால், ஒரு லொத்தர் சீட்டுக்கான விற்பனை முகவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 3.75 ரூபாய் கொமிஷன் (தரகு பணம்) 8 ரூயாக அதிகரிக்கப்பட வேண்டுமென கிருசாந்த சுட்டிக்காட்டினார்.
கமிஷன் தொகையை எட்டு ரூபாயாக அதிகரிக்காவிட்டால் லொத்தர் சீட்டுகளை விற்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் கூறுகிறார்.
லொத்தர் சீட்டுகளின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமது தொழிற்சங்கம் போராட்டம் நடத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விலையை அதிகரிப்பதில் லொத்தர் சீட்டுகளை வாங்குபவருக்கும் ஆட்சேபனை இருப்பதாக அவர்களுடனான உரையாடலில் இருந்து தெரியவருவதாக கிருஷாந்த மேலும் தெரிவித்தார்.