நாட்டில் இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் எரிபொருள் விநியோகத்தைத் தொடர இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய கூட்டுத்த...
நாட்டில் இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் எரிபொருள் விநியோகத்தைத் தொடர இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியங்கள் முனையத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் போதுமான அளவு எரிபொருள் இருப்புகளை வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர்,
மேலதிக நேரச் செலவுகளைக் குறைக்க, கடந்த 4 மாதங்களில் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியங்கள் இயங்கவில்லை.
விலைக் குறைப்பை எதிர்பார்த்து கடந்த சனிக்கிழமை முதல் எரிபொருள் நிலையங்கள் கொள்வனவுக்கான கட்டளைகளை வழங்காதது, குறைந்தபட்ச இருப்புக்களை பராமரிக்காதது, விலை திருத்தம் மற்றும் ஒதுக்கீடு அதிகரிப்புக்குப் பிறகு நுகர்வோரின் உடனடி தேவை அதிகரிப்பு ஆகியவை எரிபொருள் நிலையங்களில் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.