யாழ்ப்பாணத்துக்கான விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவை, வட மாகாண சபை ம...
யாழ்ப்பாணத்துக்கான விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவை, வட மாகாண சபை மகளிர் விவகார மற்றும் சமூக சேவைகள் புனர்வாழ்வு கூட்டுறவு முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழக தலைவியுமான அனந்தி சசிதரன் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார்.
இன்று (30) காலை யாழ்ப்பாணத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
வடமாகாண மகளிர் உரிமைகள், மனித உரிமைகளை பாதுகாத்தல், காணாமல் போனவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் உடனிருந்தார்.