அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் சில பிரதேச செயலகங்கள் கூடிய மக்கள் தமக்கு அநீதி இழைக...
அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் சில பிரதேச செயலகங்கள் கூடிய மக்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
குறிப்பாக இன்று (26) கோப்பாய் பிரதேச செயலகம் முன்பாக கூடிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தின் கீழ் பண கொடுப்பனவுகளை மாதம் தோறும் பெற்றுக் கொள்ள விண்ணப்பித்து தகுதி உடையவர்களின் பெயர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.
https://iwms.wbb.gov.lk/household/list
குறித்த பட்டியல் மாவட்ட செயலகம், பிரதேச செயலர் பிரிவு, கிராம சேவகர் பிரிவுகளில் பார்வையிட முடியும்.தவறுகள்/ஆட்சேபனைகள்/மேன்முறையீடுகள் இருப்பின் ஜூன் 30ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பித்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.