அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆலன் கிழக்கு மையத்தில் பகவத் கீதையை உச்சரிக்கும் நிகழ்ச்சியில் 4 முதல் 84 வயதுக்கு உட்பட்டவர்களில் மொத்தம...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆலன் கிழக்கு மையத்தில் பகவத் கீதையை உச்சரிக்கும் நிகழ்ச்சியில் 4 முதல் 84 வயதுக்கு உட்பட்டவர்களில் மொத்தம் 10,000 பேர் வரை கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு யோகா சங்கீதா மற்றும் எஸ்.ஜி.எஸ். கீதா பவுண்டேசன் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. குரு பூர்ணிமாவை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்ச்சி, உலக புகழ் பெற்ற ஆன்மீக சுவாமிகளான பூஜ்ய கணபதி சச்சிதானந்த ஜி முன்னிலையில் நடந்தது.
இதனை மைசூரு நகரில் உள்ள அவதூத தத்தா பீடம் ஆசிரமம் தெரிவித்துள்ளது.
சுவாமியின் வழிகாட்டுதலின் பேரில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கீதை உச்சரிப்பு நிகழ்ந்தது.
அவர்களில் பலர் 8 ஆண்டுகளாக சுவாமியை பின்பற்றி அதனை நினைவில் கொள்ளும் வகையில் மனப்பாடம் செய்து வருகின்றனர்.
அமெரிக்காவில் இந்து ஆன்மீக தன்மையை பரப்பும் நோக்கில் கடந்த சில நாட்களாக சுவாமிஜி இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.