சட்டத்தரணிகள் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (11) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதோடு மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்னால் கண்டன...
சட்டத்தரணிகள் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (11) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதோடு மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்னால் கண்டன ஆhப்;பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
கடந்த தில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் நீதிபதிகளை எச்சரித்து தெரிவித்த கருத்தை கண்டித்து மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் தலைவர் சிரேஷ;ட சட்டத்தரணி போ. பிறேமநாத்த பணிப்புறக்கணிப்பிற்கு அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து இன்று காலை 9 மணிக்கு மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்னால் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சட்டத்தரணிகள், மற்றும் மட்டு நீதிமன்ற கட்டிடத் தொகுதி சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் நீதிதுறை சுதந்திரத்திற்காய் குரல்கொடுப்போம், நீதிதுறை சுதந்திரத்தை உறுதி செய், நீதிதுறைக்கு அரசியலல் தலையீடு வேண்டாம். நீதிதுறையின் சுதந்திரமே ஜனநாயகத்தின் தூண், நீதிதுறையில் இனவாதத்தை கலக்காதே, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு சுமார் ஒரு மணித்தியாலம் கண்டன ஆர்பட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.