லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பி - லவ் கண்டி அணி 61 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் ...
லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பி - லவ் கண்டி அணி 61 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பாடிய பி - லவ் கண்டி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணி சார்பில், அதிகபடியாக மொஹம்மட் ஹரிஸ் 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் ஜப்னா கிங்ஸ் அணியின் மகீஷ் தீக்ஷன 37 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்தநிலையில், 189 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி 17.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில் அதிகபடியாக சோயிப் மலிக் 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், பி - லவ் கண்டி அணியின் வனிந்து ஹசரங்க 09 ஓட்டங்களுக்கு 06 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதேவேளை, இன்று இடம்பெற்ற முதலாவது தகுதிக்காண் போட்டியில், கோல் டைடன்ஸ் அணியை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்திய தம்புள்ளை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியமை குறிப்பிடத்தக்கது.