கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் கிராம மக்கள் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த பகுதியில் பொது...
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் கிராம மக்கள் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த பகுதியில் பொதுச்சந்தை, விளையாட்டு மைதானம் மற்றும் தபாலகம் உள்ளிட்ட பொது தேவைகளுக்காக அடையாளப்படுத்தப்பட்ட காணியொன்று, தொண்டு நிறுவனமொன்றுக்கு கையளிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிதே இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட சேவை நிலையங்களிற்கு முன்னுரிமைப்படுத்தி காணியை வழங்குமாறு அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளன.
மேலும், தமது பிரதேசத்தில் 24 குடும்பங்களிற்கு காணி வழங்க விண்ணப்பித்துள்ள நிலையில், அதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், இவ்வாறு காணிகளை தொண்டு நிறுவனங்கள் ஊடாக வெளிநாட்டவர்களிற்கு வழங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த விடயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி பிரதேச செயலாளர் பி.ஜெயகரன் தெரிவித்துள்ளார்.