போலி சான்றிதழ் மூலம் ஆசிரியராக பணியாற்றிவர் கைது; சான்றிதழ் தயாரித்தவரும் கைது

போலி சான்றிதழ் மூலம் ஆசிரியராக பணியாற்றிவர் கைது; சான்றிதழ் தயாரித்தவரும் கைது

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போலியான பெறுபேற்று சான்றிதழை சமர்ப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேலான காலப்பகுதியில் ஆசிரியர் சேவையில் கடமையாற்றிய நபரை...

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போலியான பெறுபேற்று சான்றிதழை சமர்ப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேலான காலப்பகுதியில் ஆசிரியர் சேவையில் கடமையாற்றிய நபரை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அவருக்கு போலி பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழை தயாரித்து வழங்கியவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.


ஆசிரியர் சேவை பதவிநிலை உயர்வு பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேற்று சான்றிதழ் உறுதிப்படுத்தலுக்காக பரீட்சைத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட போதே அது போலியானது எனக் கண்டறியப்பட்டு மோசடி குற்றச்சாட்டின் கீழ் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஒன்றில் கற்பித்த ஒருவரே இன்று இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

குறித்த நபர் இராணுவ சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றிய சில வருடங்களின் பின் மாகாண கல்வி அமைச்சினால் தொண்டர் ஆசிரியராக இணைக்கப்பட்டுள்ளார்.


2019ஆம் ஆண்டில் தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் சேவை தரம் 3இற்கு உள்ளீர்க்கும் போது குறித்த நபருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


3 வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக சம்பளம் பெற்று வந்த நிலையில் பதவிநிலை உயர்வுக்காக கல்வித் தகமை ஆவணங்களை அவர் சமர்ப்பித்துள்ளார்.

க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சை சான்றிதழ் பரீட்சைகள் திணைக்களத்துக்கு உறுதிப்படுத்தலுக்காக அனுப்பிவைக்கப்பட்டன.

அவற்றில் க.பொ.த. உயர்தர பரீட்சை சான்றிதழ் சுட்டெண் தவறு என்பது கண்டறியப்பட்டு பரீட்சைகள் திணைக்களத்தினால் பொலிஸ் திணைக்களத்துக்கு குறித்த நபர் மீது மோசடி குற்றச்சாட்டின் கீழ் அறிக்கையிடப்பட்டது.


பொலிஸ் திணைக்களத்தினால் குறித்த நபர் மீதான விசாரணை யாழ்ப்பாணம் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணை பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறப்பு குற்ற விசாரணை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து மோசடி நபரை இன்று கைது செய்தனர்.

அத்துடன், அவருக்கு உயர்தரப் பரீட்சையின் போலி சான்றிதழை தயாரித்து வழங்கிய நபரும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மோசடி நபர் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் இரண்டு அமர்வுகளில் சித்தியடையவில்லை என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் இன்று யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,397,Jaffna,3401,lanka,8704,medical,7,Medicial,39,sports,367,swiss,15,technology,79,Trending,4266,Videos,10,World,587,Yarlexpress,4275,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: போலி சான்றிதழ் மூலம் ஆசிரியராக பணியாற்றிவர் கைது; சான்றிதழ் தயாரித்தவரும் கைது
போலி சான்றிதழ் மூலம் ஆசிரியராக பணியாற்றிவர் கைது; சான்றிதழ் தயாரித்தவரும் கைது
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtOzizbtbs3PKWhIv4kIkML1Xdb8dm5IwlNPDwTMtyoSMhgcopPFNU-gedHx4d0e_PD3yVxnZJO0CeEfwme9vN8FT2Nlj2j2ca6QD91Nt406SkkaDff1_JlFzTrxD1qofVbqjQRF2CxLH82w1jQwor7fO3cOPAkrH8asSIFHrKmlZvdyaoWNUYpTI0hCrN/w640-h344/Arrest_0.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtOzizbtbs3PKWhIv4kIkML1Xdb8dm5IwlNPDwTMtyoSMhgcopPFNU-gedHx4d0e_PD3yVxnZJO0CeEfwme9vN8FT2Nlj2j2ca6QD91Nt406SkkaDff1_JlFzTrxD1qofVbqjQRF2CxLH82w1jQwor7fO3cOPAkrH8asSIFHrKmlZvdyaoWNUYpTI0hCrN/s72-w640-c-h344/Arrest_0.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2023/09/blog-post_9.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2023/09/blog-post_9.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content