இயற்கை விவசாய செயன்முறைகளை ஊக்குவிக்கும் முகமாக சுன்னாகம் விவசாயப் போதனாசிரியர் ப.மீனலோஜினியின் வழிகாட்டுதலில் வீட்டுத் தோட்டத்தில் பயிர்த்த...
இயற்கை விவசாய செயன்முறைகளை ஊக்குவிக்கும் முகமாக
சுன்னாகம் விவசாயப் போதனாசிரியர் ப.மீனலோஜினியின் வழிகாட்டுதலில் வீட்டுத் தோட்டத்தில் பயிர்த்தெரிவு, பண்படுத்தல் மற்றும் சிக்கன நீர்ப்பாசன உத்தி, இயற்கை நாசினிப் பயன்பாடு, மண்புழு திரவ உர உற்பத்தி என்பவை பற்றிய செயல் முறையுடன் கூடிய நிகழ்ச்சி திட்டம் கந்தரோடை தமிழ்கந்தையா வித்தியாசாலையில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
மாணவர் ஆர்வத்துன் இச் செயல் விளக்கங்களை அவதானித்தும், செயற்பாட்டிலும் ஈடுபட்டனர்.
இத்துடன் இப்பாடசாலை மாணவர்கள் தங்கள் பாடசாலை விவசாயக் கழகத்தை விவசாயத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இளைஞர் விவசாயக் கழகமாகவும் பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை தமது பகுதி விவசாயப் போதனாசிரியர் ப.மீனலோஜினியிடம் கையளித்தனர்.
பாடசாலை முதல்வர் சைலினி பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இச் செயற்பாடுகளில் வலிகாமம் கல்விவலயத்தைச் சேர்ந்த விவசாய பாட ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம் மற்றும் தொழில் முனைவுடன் கூடிய பாடசாலை நிகழ்ச்சித்திட்ட வளவாளர் எஸ்.சிவகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.