ஜெயிலர் திரைப்படத்தின் வில்லனாக நடித்த விநாயகன் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் அயலவர்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் விசாரணை...
ஜெயிலர் திரைப்படத்தின் வில்லனாக நடித்த விநாயகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் அயலவர்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் விசாரணைக்காக எர்ணாகுளம் பொலிஸ் நிலையத்திற்கு விநாயகம் அழைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது, பொலிஸாரை தகாத வார்த்தைகளினால் பேசி, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நடிகர் விநாயகத்திற்கு எதிராக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், எர்ணாகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.