அழுத்தங்கள் காரணமாக ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில், அழுத்தங்களை பிரயோகித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து...
அழுத்தங்கள் காரணமாக ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில், அழுத்தங்களை பிரயோகித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து அதிகாரங்களும் தம்வசம் காணப்பட்ட தருணத்திலும், அதனை செய்யாமைக்கான பொறுப்பை முல்லைத்தீவு முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (03) எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கான பொறுப்பை அரசாங்கத்தின் பக்கம் திருப்புவதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அச்சுறுத்தல்களை பிரயோகித்தவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகின்றது எனவும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.