யாழ்ப்பாணம் – மயிலிணி சைவ வித்தியாலயத்தில் சிறப்பான முறையில் தொழில் முனைவுடன் கூடிய பாடசாலை தோட்டமுயற்சியில் ஈடுபட்டு மல்லாவி மத்திய கல்லூரி...
யாழ்ப்பாணம் – மயிலிணி சைவ வித்தியாலயத்தில் சிறப்பான முறையில் தொழில் முனைவுடன் கூடிய பாடசாலை தோட்டமுயற்சியில் ஈடுபட்டு மல்லாவி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற விவசாயக் கண்காட்சியின்போது கல்வி அமைச்சர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் என்பவர்களின் கரங்களால் 150000/- பெறுமதியான பண வவுச்சரைப் பெற்ற பாடசாலையின் விவசாயக் கழக மாணவர்கள் பாடசாலை சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.
விவசாயக்கழக மாணவர்கள் பாண்ட் வாத்தியங்கள் சகிதம் மயிலிணி முருகமூர்த்தி கோவிலிலிருந்து அழைத்துவரப்பட்டு பாடசாலை பிரதான மண்டபத்தில் பாடசாலை முதல்வர் திருமதி அ.சண்முகநாதன் தலைமையில் இவர்களிற்கான பாராட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது.
இவ் விழாவின்போது நோர்வே உதவுங்கரங்கள் அமைப்பு (சுன்னாகம்) விவசாய முயற்சியில் சிறப்பாக ஈடுபட்ட மாணவருக்கு பெறுமதிமிக்க பாடசாலைப் புத்தகப் பைகளை அன்பளிப்புச் செய்துமிருந்தனர். அத்துடன் தோட்ட செயற்பாட்டிற்கு உறுதுணயாக இருந்த பாடசாலை ஊழியர், விவசாயக் கழகப் பொறுப்பாசிரியர், விவசாயக்கழக போசகர் என்போரும் கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்விற்கு வலிகாமம் கல்விவலய விவசாயபாட ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம் விருந்தினராகக் கலந்து தொழில் முனைவுடன் கூடிய பாடசாலைத்தோட்ட முயற்சியில் ஈடுபட்ட மாணவர்களை வாழ்த்தியுமிருந்தார்.