வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை(10) கொழும்பில் உள்ள ...
வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை(10) கொழும்பில் உள்ள ஜப்பான் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் வட மாகாணம் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பான் அரசின் சார்பில், வடபகுதியின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் என்று தூதர் உறுதி அளித்தார் என்று வடமாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.