இஸ்ரேல் படையினரின் கூட்டு முயற்சியில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் படைத்துறை பேச்சாளர் அலுவலகம் புதன்கிழமை மாலை தெரி...
இஸ்ரேல் படையினரின் கூட்டு முயற்சியில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் படைத்துறை பேச்சாளர் அலுவலகம் புதன்கிழமை மாலை தெரிவித்துள்ளது.
இதன்படி ஹமாஸ் அமைப்பின் தாங்கி எதிர்ப்பு பிரிவின் தளபதியான முகமட் அட்சர் என்பவரே கொல்லப்பட்டவராவார்.
விமான தாக்குதல் மூலம்
ஷின் பெட்டின் வழிகாட்டுதலுடன், இஸ்ரேல் படைத்துறை ஒரு போர் விமானத்தைப் பயன்படுத்தி முஹம்மது அட்சரின் இடம் அடையாளம் காணப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தளபதியாக இருந்த காலத்தில், இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக பல தாங்கி எதிர்ப்பு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளார் என இஸ்ரேல் படைத்துறை மேலும் தெரிவித்துள்ளது.