மைதானத்திற்குள் தான் இரண்டு நிமிடங்களுக்கு முன்பாக சென்று, துடுப்பெடுத்தாட தயாரானமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஏஞ்சல...
மைதானத்திற்குள் தான் இரண்டு நிமிடங்களுக்கு முன்பாக சென்று, துடுப்பெடுத்தாட தயாரானமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்;.
தலைகவசத்தை அணிந்து, துடுப்பெடுத்தாட தயாராகி ஐந்து விநாடிகள் எஞ்சியிருந்ததை வீடியோ காணொளி மூலம் உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
துடுப்பெடுத்தாடுவதற்கு முன்பாக தலைகவசம் அணிந்து பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, நான்காவது நடுவர் வழங்கிய தீர்ப்பு தவறானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துடுப்பெடுத்தாடுவதற்கு ஐந்து விநாடிகள் எஞ்சியிருந்ததை உறுதிப்படுத்தும் வீடியோ ஆதாரத்தை இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.