யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் 25 ஆவது ஆண்டு நிறைவு காற்பந்தாட்ட தொடரில் சென் பற்றிக்ஸ் கல்லூரி சம்பியன் பட்டத்தை வென்றது...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் 25 ஆவது ஆண்டு நிறைவு காற்பந்தாட்ட தொடரில் சென் பற்றிக்ஸ் கல்லூரி சம்பியன் பட்டத்தை வென்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான (19 வயது ) காற்பந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டம் நேற்று திங்கட்கிழமை(04) 03 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியை எதிர்த்து இளவாலை சென் ஹென்றீஸ் கல்லூரி மோதியது.
பரபரப்பாக நடைபெற்ற இவ் இறுதியாட்டத்தில் இரு அணிகளும் குறிப்பிட்ட நேரத்தில் கோல்கள் பெறும் சந்தர்பங்களை தவறவிட ஆட்டம் 00:00 என்ற அடிப்படையில் சமநிலையில் முடிந்தது.
வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பில் ( Penalty ) சென் பற்றிக்ஸ் கல்லூரி 04 : 02 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் வெள்ளி விழா சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.