மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்த போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது...
மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்த போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தினார்.
மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இலங்கையை வந்தடைந்தார்.
அந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில், அவர் நாடு திரும்பி 48 மணித்தியாலங்களுக்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆஜராகி வாக்குமூலமொன்றை வழங்குமாறு அவருக்கு அண்மையில் உத்தரவிடப்பட்டிருந்து.
அந்த உத்தரவின்படி, போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முன்னிலையாகியிருந்ததுடன் இன்று இரண்டாவது நாளாக ஆஜராகியிருந்தார்.