யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த பயணிகள் மீது பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதியினால் தாக்கப்பட்ட...
யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த பயணிகள் மீது பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதியினால் தாக்கப்பட்டுள்ளனர்.
தனியார் நிறுவனம் ஒன்றின் (பிக் மீ) ஊடாக போக்குவரத்து சேவைகளை வழங்கி வரும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் தனக்கு வந்த அழைப்பின் பிரகாரம் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு சென்று , அங்கிருந்து பயணிகளை ஏற்றி செல்ல முற்பட்டுள்ளார்.
அதன் போது அங்கு வந்த மற்றுமொரு முச்சக்கர வண்டி சாரதி , பயணிகளை ஏற்ற வந்த சாரதியையும் , அதில் இருந்த பயணியையும் தாக்கியுள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சாரதி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுக்கு செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் கட்டணமானிகள் இன்றியே முச்சக்கர வண்டி சாரதிகள் கட்டணம் அறவிட்டு வந்தனர் , நீண்ட காலத்தின் பின்னர் யாழில் தற்போது கட்டமானிகள் பெருத்திய சில முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட்டு வருவதுடன் , தனியார் நிறுவனங்கள் ஊடாகவும் போக்குவரத்து சேவைகளில் சில முச்சக்கர வண்டிகள் இணைந்து சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்நிலையில் கட்டமானிகள் பொருத்தாத மற்றும் தனியார் போக்குவரத்து சேவையினருடன் இணையாத முச்சக்கர வண்டி சாரதிகள் , மற்றைய சாரதிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்
யாழ்ப்பாணத்தில் இதுவரையில் 05க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ள போதிலும் பொலிஸார் உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுப்பதில்லை எனும் குற்றச்சாட்டு சாரதிகள் மத்தியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.