தென் மாகாண முன்னாள் முதலமைச்சராக கடமையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, ஐக்கிய மக்கள் சக்திய...
தென் மாகாண முன்னாள் முதலமைச்சராக கடமையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (01) காலை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஷான் விஜயலால் இணைந்து கொண்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதி பிரதான அமைப்பாளராக ஷான் விஜயலால் டி சில்வா, எதிர்கட்சித் தலைவரினால் நியமிக்கப்பட்டார்.