அடிப்படை வசதிகளே இல்லாத சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். பலாலியில் உள்ள யாழ்ப்...
அடிப்படை வசதிகளே இல்லாத சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை பொறுத்தவரை மிக சிறிய நிலப்பரப்பிலேயே கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுடன் வருபவர்கள் விமான நிலையத்திற்குள் செல்ல முடியாது. பயணிகளை அழைத்துவர செல்பவர்களுக்கும் அதே நிலை தான்.
பயணிகளுடன் செல்பவர்களோ, பயணிகளை அழைத்துவர செல்பவர்களோ விமான நிலையத்தில் வெளியே உள்ள மரங்களுக்கு கீழ் உள்ள கல்லாசனங்களிலேயே அமர முடியும்.
அவ்வாறு இருப்பவர்கள் பயன்படுத்த சிற்றுண்டிச்சாலை, குடிநீர் வசதி, என்பனவற்றுக்கு எவ்வித வசதி வாய்ப்பும் இல்லை.
கோடை காலத்தில் கல்லாசனங்கள் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் மாரி காலத்தில் மழை பெய்தால் கல்லாசனங்களில் இருக்க முடியாது.
விமான நிலையம் திறந்து
ஜந்து வருடங்களாகின்ற போதிலும் உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்தும் காணப்படுகின்றது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்தியா மற்றும் கொழும்பு இடையேயான பயணிகள் சேவைகள் இடம்பெற்று வருவதுடன் பெருமளவானவர்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென்னிந்திய பிரபலங்கள் அதிகம் பேர் வருகை தருகின்றனர்.
சுற்றுலாவை விருத்தி செய்ய பாடுபடுவதாக கூறும் அரசாங்கம், துறைசார் அமைச்சும் குறித்த விடயத்தை கவனத்தில் கொள்வது அவசியமாகும்.