காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னா...
காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்வதற்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்களுக்கான அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூட்டத்தில் கடந்த வருடம் செப்டெம்பர் 21ஆம் திகதி ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.