வட மாகாணத்தில் சட்ட விரோத மீன்பிடி செயல்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் வடமான ஆளுநருக்கு பல மையகர்களை வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை என யா...
வட மாகாணத்தில் சட்ட விரோத மீன்பிடி செயல்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் வடமான ஆளுநருக்கு பல மையகர்களை வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்ன ராசா குற்றச்சா அடடை முன்வைத்தார்.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்திய சட்ட விரோத மீன்பிடி தொழிலை கட்டுப்படுத்தவும் உள்ளூர் சட்ட விரோத தொழிலை கட்டுத்துமாறு கோரி மஜகர் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த வருடம் கிழக்கு மாகாண ஆளுநர் அங்கு இடம்பெறும் சட்டவிரோத சுருக்கு வலைத் தொழிலுக்கு எதிராக களத்தில் இறங்கி தீர்வை பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஆனால் எமது வடக்கே இடம் வரும் மீனவர் பிரச்சினை தொடர்பில் வடமாகாண ஆளுநருக்கு பல தடவைகள் மஜகர் வழங்கியிருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
வடபகுதியில் சட்ட விரோத கடல் அட்டப் பண்ணகள் இடம்பெறுகின்றது சட்டவிரோத மீன்பிடி இடம்பெறுகிறது அது தொடர்பில் மீனவ சங்கங்களை அழைத்து ஆளுநர் பேசவில்லை.
நாங்கள் வழங்கும் மஜகர்களை மட்டும் ஜனாதிபதி பிரதமருக்கு அனுப்புவதற்காக வழங்கவில்லை ஆளுநர் என்ற நீதியில் அவரது அதிகாரத்துக்கு உற்பட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஆகவே வடமாகாண ஆளுநரிடம் வினையமாக கேட்டுக் கொள்வது யாதெனில் எமது மீனவர் பிரச்சினை தொடர்பில் சங்கங்களை அழைத்து அவர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வுகளை பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக் கள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.