யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் முச்சக்கரவண்டியுடன் பட்டாரக வாகனம் மோதுண்டு இன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர்...
யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் முச்சக்கரவண்டியுடன் பட்டாரக வாகனம் மோதுண்டு இன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார்.
காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டி செயழிலந்த நிலையில் அதனை பரிசோதித்தபோது பின்னால் வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.