ஐ.பி.எல் தொடரின் 16-வது லீக் போட்டியில் கொல்கத்தா- டெல்லி அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய...
ஐ.பி.எல் தொடரின் 16-வது லீக் போட்டியில் கொல்கத்தா- டெல்லி அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ஓட்டங்களை எடுத்தது.
கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நரேன் 85 ஓட்டங்களும் ரகுவன்ஷி 54 ஓட்டங்களும் விளாசினர். இறுதியில் வந்த ரஸல் 46 ஓட்டங்களும் ரிங்கு சிங் 26 ஓட்டங்களும் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டுக்களையும் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுக்களையும் வீழ்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. பிரித்வி ஷா 10, மிட்செல் மார்ஷ் 0, அபிஷேக் போரல் 0, டேவிட் வார்னர் 18 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் டெல்லி அணி 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து அணித் தலைவர் ரிஷப் பண்ட் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தனர். இந்த நிலையில் சக்கவர்த்தி வீசிய ஓவரில் இருவரும் ஆட்டமிழந்தனர். பண்ட் 55 ஓட்டங்களுடனும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 54 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.
அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் வெளியேறினர். இதனால் கொல்கத்தா அணி 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும் ஸ்டார்க், வைபவ் அரோரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.