பொன்னாலை வெண்கரம் இலவச படிப்பகத்தில் மாலை நான்கு மணியளவில் ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான பொன்ராசா தலைமையில் நினைவேந்தல் முன்னெடுக்க...
பொன்னாலை வெண்கரம் இலவச படிப்பகத்தில் மாலை நான்கு மணியளவில் ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான பொன்ராசா தலைமையில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்பொழுது ஒரு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டு ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஈகை சுடரும் ஏற்றி வைக்கப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபன் இறுதிக்கட்ட யுத்தத்தின் பொழுது யாழ் குடாநாட்டிற்கான தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் இராணுவ கட்டுபாட்டிற்குள் தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியராக கடமையாற்றிய நிலையில் யாழ் குடாநாட்டின் கள் நிலைமைகளை பலதரப்பட்ட ஊடகங்களின் வாயிலாக வெளிக்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.