17ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (17) நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் 32ஆவது லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் ...
17ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (17) நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் 32ஆவது லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் - ரிஷப் பண்ட் தலைமையலான டில்லி கெபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
குஜராத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் 3 வெற்றி (மும்பை, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வி (சென்னை, பஞ்சாப், லக்னோ அணிகளிடம்) கண்டுள்ளது.
டெல்லி அணி தனது முதல் 2 ஆட்டங்களில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளிடம் தோற்றது. 3ஆவது ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது. அடுத்த 2 ஆட்டங்களில் கல்கத்தா, மும்பையிடம் பணிந்தது. கடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை எளிதில் தோற்கடித்தது.