ஐ.பி.எல் தொடரின் இன்றைய 18-வது லீக் போட்டியில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு ச...
ஐ.பி.எல் தொடரின் இன்றைய 18-வது லீக் போட்டியில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய சி.எஸ்.கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக துபே 45 ஓட்டங்களை எடுத்தார்.
இதனையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா - ஹெட் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தார். இவரை தீபக் சாஹர் ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்து வந்த மார்க்ரம் மற்றும் ஹெட் ஜோடி நிதானமாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர்.
ஹெட் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய மார்க்ரம் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷபாஸ் அகமது 18 ஓட்டங்களுடன் வெளியேறினார். இதனையடுத்து கிளாசன் மற்றும் நிதிஷ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
இறுதியில் ஐதராபாத் அணி 19.1 ஓவரில் 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. சி.எஸ்.கே தரப்பில் மொயின் அலி 2 விக்கெட்டும் தீபக் சாஹர் தீக்ஷன தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.