ஐ.பி.எல் வரலாற்றில் 20 ஓவர்களில் அதிகபட்ச ஓட்டங்களை பெற்ற தனது சொந்த சாதனையை சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளது. பெங்...
ஐ.பி.எல் வரலாற்றில் 20 ஓவர்களில் அதிகபட்ச ஓட்டங்களை பெற்ற தனது சொந்த சாதனையை சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளது.
பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிராக தற்போது இடம்பெற்று வரும் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 287 என்ற இமாலய ஓட்ட எண்ணிக்கையை பெற்று தனது சொந்த சாதனையை ஹைதராபாத் அணி இவ்வாறு முறியடித்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற இவ்வருட ஐபிஎல் தொடரின் 8 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 277 ஓட்டங்களை பெற்று ஹைதராபாத் அணி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி சார்பில் ட்ரவிஸ் ஹெட் அதிகபட்சமாக 41 பந்துகளில் 102 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
ஹென்ரிச் கிளாஸன் 67 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
ஹெய்டன் மெக்ரம் மற்றும் அப்துல் சமட் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 32 மற்றும் 37 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.