2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான குஷ்போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்...
2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான குஷ்போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்து தலைநகர் பெங்கொக்கிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த சந்தேகநபரின் பயண பையிலிருந்து 5.278 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 32 வயதான சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.