கல்கிசையில் ஆயுர்வேத ஸ்பா என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்...
கல்கிசையில் ஆயுர்வேத ஸ்பா என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசை காசியா மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது விபச்சார விடுதியின் முகாமையாளர் உட்பட ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் பாணந்துறை, எல்பிட்டிய, நிட்டம்புவ, கெட்டபுலவ மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 25 மற்றும் 37 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.