நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை (22) வழமை போன்று இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவத...
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை (22) வழமை போன்று இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு நாளை (22) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி போலியானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையீலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை நடாத்துவது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்கள் வசம் எனவும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.