யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்துவைப்பதற்காக யாழ்ப்பாணம் வருகைதரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு யாழ்ப்பாணப் பல...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்துவைப்பதற்காக யாழ்ப்பாணம் வருகைதரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சுமார் பன்னிரண்டாயிரம் பணியார்கள் தங்களுடைய சம்பள முரண்பாடு மற்றும் நீண்ட காலமாகத் தீர்த்து வைக்கப்படாத பிரச்சினைகள் பலவற்றைத் தீர்க்கக்கோரி நாடளாவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நேரத்தில், பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான கட்டமொன்றைக் கோலாகலமாகத் திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருவதைக் கண்டிப்பதாக யாழ்ப்பாணப் பல்கல்கலைக்கழக ஊழியர் சங்கம் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.