இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த சட்ட ரீதியில் அங்கீகாரம் கிடையாது என உயர் நீதிமன்றம் இன்று உத...
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த சட்ட ரீதியில் அங்கீகாரம் கிடையாது என உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு வழங்கியுள்ளது.
சமூக செயற்பாட்டாளரான ஓசல ஹேரத் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
டயனா கமகே, பிரித்தானிய பிரஜை என்ற அடிப்படையில் அவருக்கு இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த சட்ட ரீதியில் அங்கீகாரம் கிடையாது என்ற தீர்ப்பை வழங்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.