இலங்கையில் “சிக்கிபில்லா” என அழைக்கப்படும் மிருகம் உள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என AFP செய்தி வெளியிட்டுள்ளது. சிக்கிபில்லா த...
இலங்கையில் “சிக்கிபில்லா” என அழைக்கப்படும் மிருகம் உள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என AFP செய்தி வெளியிட்டுள்ளது.
சிக்கிபில்லா தொடர்பான எந்தவொரு தகவலும் இதுவரை இலங்கையில் பதிவாகவில்லை என தேசிய சரணாலய அதிகாரிகளை மேற்கோள்காட்டி AFP செய்தி வெளியிட்டுள்ளது.
“அழிவடைந்துள்ளதாக எண்ணிய சிக்கிபில்லா என்ற மிருகம், யால தேசிய சரணாலயத்தில் 103 வருடங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என சமூக வலைத்தளங்களில் பதிவொன்று வெளியிடப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிருகங்கள் தொடர்பான சிரேஷ்ட பேராசிரியர் கனிஷ்க உக்குவல AFPக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
“சிக்கிபில்லா என அழைக்கப்படும் மிருகம் இலங்கையில் கிடையாது. இவ்வாறான மிருகமொன்று உலகில் வாழ்ந்துள்ளமை சந்தேகத்திற்குரியது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பேஸ்புக் பதிவில் வெளியிடப்பட்ட படமானது கூகுள் தேடுத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒன்று என இந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.