இந்தியாவின் PhonePe டிஜிட்டல் கொடுப்பனவு முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று (15) இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது...
இந்தியாவின் PhonePe டிஜிட்டல் கொடுப்பனவு முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று (15) இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜே மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த முறையின் ஊடாக, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய பிரஜைகள், தமது கொடுப்பனவுகளை பணத்தை பயன்படுத்தாது, டிஜிட்டல் முறையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.