சந்தேகத்திற்கிடமான வகையில் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகளைப் பெற்றதாகக் கூறப்படும் மொடல் அழகி பியூமி ஹன்ஸமாலியின் கணக்குப் பதிவேடுகளைப் பர...
சந்தேகத்திற்கிடமான வகையில் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகளைப் பெற்றதாகக் கூறப்படும் மொடல் அழகி பியூமி ஹன்ஸமாலியின் கணக்குப் பதிவேடுகளைப் பரிசோதிக்க மாளிகாகந்த நீதவான், இரகசியப் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இதனால், நாட்டிலுள்ள 08 முன்னணி வங்கிகளில் பேணப்பட்டுள்ள 19 கணக்குகளின் பதிவேடுகளைப் பரிசோதிக்க இரகசியப் பொலிஸாருக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
இந்தச் சொத்துகள் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டன என்பதை வெளிப்படுத்துமாறும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தின் மூலம் பணம் சம்பாதித்ததா என்பது குறித்து விசாரணை நடத்துமாறும் இரகசியப் பொலிஸாருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையையடுத்து வங்கிப் பதிவுகளையும் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
‘மகேன் ரட்ட’ அமைப்பின் தலைவர் சஞ்சய் மஹவத்த, சட்ட விரோத சொத்துகள் விசாரணைப் பிரிவின் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சம்பத் ராஜகருணா, பிரதிப் பரிசோதகர் தரங்க லக்மால் ஆகியோர் நீதிமன்றில் முன்வைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இது தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் முன்வைத்தனர்.
2011ஆம் ஆண்டின் 40ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட பண மோசடிச் சட்டத்தின் 6ஆம் இலக்கத்தின் கீழ் இந்த விசாரணை நடத்தப்பட்டு, இரகசியப் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த நீதவான், வங்கிக் கணக்குப் பதிவேடுகளை சமர்ப்பிக்க பொலிஸாருக்கு அதிகாரம் அளித்து அவர்களிடம் கூறினார்.
விசாரணையின் முன்னேற்றத்தை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.