யாழ்ப்பாணம் காக்கை தீவு மீன் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுந்தடைந்த இறால்களை அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காக்கைத...
யாழ்ப்பாணம் காக்கை தீவு மீன் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுந்தடைந்த இறால்களை அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காக்கைதீவு சந்தையில் பழுதடைந்த மீன் மற்றும் இறால்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆனைக்கோட்டை பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சந்தைக்கு சென்று திடீர் சோதனை நடவடிக்கைளை முன்னெடுத்தார்.
அதன் போது , விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த, மீன்கள் மற்றும் இறால்கள் ஒரு தொகையை மீட்டிருந்தார்.
அவற்றை நீதிமன்றில் சான்று பொருட்களாக பரப்படுத்தி வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் , பழுதடைந்த மீன்கள் மற்றும் இறால்களை அழிக்குமாறும் உத்தரவிட்ட மன்று , வழக்கு விசாரணைக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதிக்கு திகதியிட்டார்.