பதில் பொலிஸ் மா அதிபரைக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப...
பதில் பொலிஸ் மா அதிபரைக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற விசாரணை முடியும் வரை தேஷபந்து தென்னகோன் தான் முன்பு வகித்த பதவியை வகிக்க முடியும் என்று நம்புவதாக அவர் கூறினார்.
வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
நாளைய தினம் பதில் பொலிஸ் மா அதிபராக பொருத்தமான நபர் நியமிக்கப்படுவார் என தாம் நம்புவதாக கூறிய அவர், விசாரணை முடியும் வரை பொலிஸ் மா அதிபர் இல்லை எனவும், ஆனால், பதில் பொலிஸ் மா அதிபரின் கீழ் தேர்தலை நடத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
நியமிக்கப்பட்ட ஜனாதிபதியின் கீழ் நாடு ஆளப்படும் பட்சத்தில், பதில் பொலிஸ் மா அதிபரின் கீழ் தேர்தலை நடத்துவது பெரிய விடயம் அல்ல என்பதால் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.