ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று (22) கைச்சாத்திடப்படவுள்ளது. சிவில் சமூக அமைப்புகள் ...
ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று (22) கைச்சாத்திடப்படவுள்ளது.
சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளினதும் ஆதரவுடன் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து ஒரு ஜனாதிபதி பொது வேட்பாளரை நிறுத்துவதற்குக் கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.
அது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இன்று கைச்சாத்திடப்பட உள்ளது.
அதேநேரம், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடிய கட்சிகள் தமிழ் மக்களது கோரிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சியாகக் குறித்த ஒப்பந்தம் அமையவுள்ளது.
அதனைத் தொடர்ந்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான திகதிகள் அறிவிக்கப்படும்போது பொது வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும்.
எல்லோரும் இணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தும்போது, நிச்சயமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பான்மையான மக்கள் குறித்த பொது வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள்.
தமிழ் மக்களுடைய தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு உந்துதலைக் கொடுப்பதே இதன் முதன்மையான நோக்கமாகும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பிரசாரத்திற்கான குழு, தேர்தல் விஞ்ஞாபனத்தை உருவாக்குவதற்கான குழு என்பவற்றுடன் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகக் குழுக்கள் நியமிக்கப்படும்.
வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற சகல பகுதிகளிலும், இது தொடர்பில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.