எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குகின்ற விஜயதாஸ ராஜபக்ஸ, தான் போட்டியிடும் கட்சி மற்றும் சின்னம் தொடர்பான தகவல்களை வெளியிட்டார். அத்த...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குகின்ற விஜயதாஸ ராஜபக்ஸ, தான் போட்டியிடும் கட்சி மற்றும் சின்னம் தொடர்பான தகவல்களை வெளியிட்டார்.
அத்துருகிரிய பகுதியில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
இதன்படி, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கார் சின்னத்தின் கீழ் தேசிய ஜனநாயக முன்னணி கட்சியில் விஜயதாஸ ராஜபக்ஸ போட்டியிடுகின்றார்.
இதேவேளை, விஜயதாஸ ராஜபக்ஸவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
தான் விஜயதாஸ ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்குவதாக முன்னர் அறிவித்திருந்த மைத்திரிபால சிறிசேன, அந்த நிலைப்பாட்டை தற்போது மாற்றிக்கொண்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தான் ஆதரவு வழங்கும் வேட்பாளர் தொடர்பான தகவல்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.