யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் இறுதி மரணச் சடங்கு நடைபெற்ற நிலையில் அங்கு கிருமித் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என தொடரப்பட்...
யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் இறுதி மரணச் சடங்கு நடைபெற்ற நிலையில் அங்கு கிருமித் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் குறித்த மருந்தக உரிமையாளர் அத் தினத்தில் மருந்தகத்தில் இருந்த மருந்துகளை அகற்றுவதற்கு நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் மரணச் சடங்கு இடம்பெற்றமை பொது மக்கள் சுகாதாரத்திற்கு பங்கம் ஏற்படுவதாகக் தெரிவித்து யாழ் நீதவான் நீதிமன்றில் சாட்சி ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டு முறைப்பாட்டாளர் சட்டத்தரணி ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கினை விசாரித்த மன்று முறைப்பாட்டாளரால் வழங்கப்பட்ட சாட்சி ஆதாரங்களை அடிப்படையாக வைத்து முகத்தோற்ற அளவில் குறித்த மருந்தகத்தில் மரணச்சடங்கு இடம் பெற்றதை உறுதி செய்த நிலையில் ஏற்கனவே மருந்தகத்தை மூடுமாறு மன்று கட்டளை வழங்கியிருந்தது.
இந்நிலையில் எதிரியான மருந்தக உரிமையாளர் குறித்த கட்டளையில் கூறப்பட்டவாறு, குறித்த காலப் பகுதியில் அதாவது
வீடு நடைபெற்றதாகக் கூறப்படுகின்ற காலப் பகுதியில், அந்த மருந்தகத்திலே வைக்கப்பட்டிருந்த மருந்துகளை அகற்றுவதற்கு இணங்கிக்கொள்கிறார் என அவரது சட்டத்தரணி மன்றுக்கு தெரிவித்தார்.
அவர் மன்றில் தெரிவித்ததாவது இந்த மருந்துகள் அகற்றுதலானது மற்றும் மருந்துப் பரிசோதகர் முன்னிலையிலும், சுமுகமான சூழ்நிலை ஒன்றைத் தோற்றுவிப்பதற்காக, நீதிமன்றப் பதிவாளர் முன்னிலையிலும் இடம்பெறுவதற்கு எதிரியா மருந்தகம் உரிமையாளர் சம்மதம் தெரிவிக்கின்றார்.
எதிரி, நீதிமன்றத்தினால் ஆக்கப்பட்ட கட்டளையினால் தடை செய்யப்பட்ட மருந்துப் பொருட்களை அதாவது,
தொற்று ஏற்படக்கூடியதும் மற்றும் குறித்த மருந்தகத்தில் காணப்பட்ட மருந்துகள், வளிச்சீராக்கி செயற்படாத காரணத்தினால், பாதிக்கப்பட்டிருக்கும் என அஞ்சப்பட்டதுமான மருந்துகளைத், தனது மருந்தகத்திலிருந்து அப்புறப்படுத்துவதாகவும்,
இம்மன்றினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள நிபந்தனைத் தடைக் கட்டளையில் சொல்லப்பட்ட விடயங்களை தான் அப்புறப்படுத்துவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
ஏற்கனவே குறித்த மருந்தகம் தொடர்பில் ஊடகங்களில் செய்தி வந்த நிலையில் உண்மைகளை மறைக்கும் பொருட்டு குறித்த மருந்தகத்தில் மருத்துவர் பல பொய்களைக் கூறி மக்களை திசை திருப்ப முயற்சித்தார்.
இருந்தாலும் குறித்த மருந்தகத்தில் மரணச்சடங்கு இடம் பெற்றதையும் அக் காலப் பகுதில் பராமரிப்பற்ற மருந்துகள் பழுதடையக் கூடிய சந்தர்ப்பம் இருந்ததாக நீதிமன்றம் கருதி மூடுமாறு கட்டளை இட்டமை அனைவரும் அறிந்த விடையம்
இன் நிலையில் கடந்தவாரம் இடம்பெற்ற வழக்கில் குறித்த மருந்தகத்தின் உரிமையாளர் நீதிமன்றின் உண்மையை ஒத்துக் கொண்டதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது
குறித்த மருந்தகத்தின் மருத்துவர் மருந்தகத்தில் மரணச் சடங்கு இடம்பெற்றமை மறைக்கும் முகமாக ஊடகங்களில் பொய்ப் பரப்புரைகளை மேற்கெண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மரணச் சடங்கு இடம்பெற்றமை வெளிப்படுத்திய ஊடகங்கள் மீது குறித்த மருந்தகத்தின் உரிமையாளர் வைத்தியர் தனது மருந்தகத்தின் மீது திட்டமிட்ட முறையில் சிலர் அவதூறுகளைப் பரப்ப முற்படுவதாக கூறியமை பொய் என நீதிமன்ற கட்டளை மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.