இலங்கையில் ஊழல் - மோசடிகளை ஒழிக்க புதிய சட்டங்களை கொண்டுவர உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். “இலங்கைக்கான எனது ஐந்தாண்டு ...
இலங்கையில் ஊழல் - மோசடிகளை ஒழிக்க புதிய சட்டங்களை கொண்டுவர உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
“இலங்கைக்கான எனது ஐந்தாண்டு பணி” என்ற தொனிப்பொருளின் கீழ் ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை கொழும்பில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார்.
இதில் நாட்டின் பொருளாதாரத்தை எதிர்வரும் 5 ஆண்டுகளில் கட்டியெழுப்பும் மற்றும் மக்களின் வறுமையை ஒழிப்பதற்கான விடயங்களை பட்டியலிட்டுள்ளார்.
அதில் ஒரு முக்கிய விடயமாக ஊழலை ஒழிக்க புதிய சட்டங்களை கொண்டுவர உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதன் பிரகாரம் ஊழலுக்கு எதிரான புதிய சட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை நியமிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
”ஊழலுக்கு எதிரான சில சட்டங்கள் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில சட்டங்கள் இயற்றப்பட வேண்டிய தேவை உள்ளது.
ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருடர்களை பிடிக்க வேண்டும் என அனைவரும் பேசுகின்றனர். அதை எப்படி செய்யப் போகிறார்கள்? பேசுவது எளிது. செயல்படுத்த நாட்டின் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.” என தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தது.