யாழில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். இதன் போது யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் யதுசாயி...
யாழில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.
இதன் போது யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் யதுசாயினி என்ற யுவதி இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்றையதினம் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வெளியே சென்றிருந்த நிலையில் குறித்த யுவதி இன்று மதியம் தனியாக வீட்டில் இருந்துள்ளார். இதன் போது தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.