மீளுருவாகும் அல்கைடா - புலனாய்வு அறிக்கை அல்கைடா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடனின் மகன் ஹம்சா பின்லாடன் உயிருடன் இருப்பதாக உளவுத்துறை அறிக்...
மீளுருவாகும் அல்கைடா - புலனாய்வு அறிக்கை அல்கைடா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடனின் மகன் ஹம்சா பின்லாடன் உயிருடன் இருப்பதாக உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிப்பதாக “த மிரர்” செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் தனது பிறிதொரு சகோதரர் அப்துல்லா பின்லாடனுடன் இணைந்து அல்கைடா அமைப்பினை ஆப்கானிஸ்தானில் இருந்து இரகசியமாக வழிநடத்தி வருவதாகவும் அந்த அமைப்பினை மீள கட்டி எழுப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட ஆப்கானிஸ்தானில் 450 அரேபியர்களையும் பாகிஸ்தானியர்களையும் கொண்ட திறமையான துப்பாக்கிதாரிகளின் நேரடி பாதுகாப்பில் அவர் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் காபூல் வீழ்ச்சியடைந்ததன் பின்னர் பல ஆயுத குழுக்களின் பயிற்சி நிலையமாக ஆப்கானிஸ்தான் செயல்படுகின்றது.
இந்த நிலையில், அல்கைடா மீண்டும் ஒருங்கிணைந்து மேற்கத்திய இலக்குகள் மீதான எதிர்கால தாக்குதல்களுக்கு தயாராகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் விமான தாக்குதல் ஒன்றில் ஹம்சா கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், ஒசாமா பின் லாடனின் மரணத்திற்கு பின்னர் இவர் அல்கைடா அமைப்பின் விவகாரங்களை மேற்கொண்டு வந்த அய்மன் அல்-ஜாவாஹிரியுடன் நெருக்கமாக பணியாற்றியதாக நம்பப்படுகின்றது.