யாழ்ப்பாணம் - ஆறுகால்மடத்தடியில் அமைந்துள்ள குருசுமதவடி வடிகால் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பிரதேச சபை ஊழியர்களால் இன்றையதினம் துப்பரவு செய்...
யாழ்ப்பாணம் - ஆறுகால்மடத்தடியில் அமைந்துள்ள குருசுமதவடி வடிகால் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பிரதேச சபை ஊழியர்களால் இன்றையதினம் துப்பரவு செய்யப்பட்டது.
ஏலோன் ஓபீசியல் கிளப் போய்ஸ் ( Alone offical club boys) கழக இளைஞர்களின் முயற்சியால் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
மழைநீர் தேங்கி நிற்பதனால் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பரவல் மற்றும் சுகாதார பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடாக இந்நடவடிக்கை இடம்பெற்றது.