மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்துப் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர...
மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்துப் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் யாழ்ப்பாண உப பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேநேரம், கைதான ஏனைய இருவரில் ஒருவர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
மற்றொருவர், இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த நபர், மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்ததாகக் கூறப்படும் பேஸ்புக் கணக்கிற்கு உரித்துடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.