ஜனநாயக வழியில் தமிழ் மக்களின் உரிமைக்கான பயணத்தின நேர்த்தியாக முன்னெடுக்கவேண்டிய கடப்பாடு ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கே உண்டு எனவே மக்கள் த...
ஜனநாயக வழியில் தமிழ் மக்களின் உரிமைக்கான பயணத்தின நேர்த்தியாக முன்னெடுக்கவேண்டிய கடப்பாடு ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கே உண்டு எனவே மக்கள் தங்கள் முழுமையான ஆதரவை சங்கு சின்னத்திற்கு வழங்க வேண்டும் என வேட்பாளர் சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.
உடுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்தேசியத்தை சிதைப்பதற்கு பலரும் இறக்கப்பட்டுள்ளார்கள். மக்கள் தெளிவாக இருக்கவேண்டும். யார் வருகிறார்கள் எதனை கூறுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தவேண்டும் .
எமது கூட்டணிதான் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான அனுபமானவர்களை ஒன்றிணைத்து, பயணிக்கிறது . எனவே எமது கூட்டணிக்கே எமது மக்கள் வாக்களிக்கவேண்டும். எனது கணவரின் வழியில் எனது பயணம் தொடர எனது இலக்கமான 7 ஆம் இலக்கத்திற்கும் வாக்களிக்குமாறும் ,
ஒற்றுமையை வெளிப்படுத்த ஒவ்வொரு வாக்குகளையும் மக்கள் எமது சங்குச் சின்னத்துக்கு வழங்கவேண்டும் என்பதுடன் அனைவரையும் வாக்களிக்க கூறவேண்டும் என்றார்.